fbpx
Homeபிற செய்திகள்பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும் வென்றான் கிராம பள்ளியில் மூலதன மானிய நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.22.37-லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளை ஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் முத்துராஜ், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால், குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன், வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த், கிளைச் செயலாளர் லட்சுமணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img