ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவன் தேசிய அளவிலான ஸ்கொய் தற்காப்பு கலை போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ஸ்கொய் தேசிய கூட்டமைப்பு நடத்திய, தேசிய அளவிலான 3ஆவது ஸ்கொய் தற்காப்பு கலை போட்டிகள் மகா ராஷ்டிரா மாநிலம் டூலே மாவட்டம், பிலிம் னரில் நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதும் 20க்கும் மேற் பட்ட மாநிலங்களில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் மாவட்டம் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் ரிஸ்வந்த், குழு ஹவுசல் மற்றும் ஹவுசல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.
போட்டியில் வெற்றி பெற்று நம் மாவட்டத்திற்கும், நம் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவனையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் மற்றும் பயிற்சியாளர் முரளி ஆகியோரை பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர்.சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா, தலைமை ஆசிரியர் கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.