fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி போல்பேட்டையில் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி போல்பேட்டையில் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை தங்கம்மாள் நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி 1, 2, 3 வார்டு பகுதி மக்களுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் 27.01.24 அன்று தூத்துக்குடி மாநகராட்சி 1, 2, 3 வார்டு பகுதி மக்களுக்காக போல்பேட்டை தங்கம்மாள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் காந்தி மணி, சுப்புலட்சுமி, ரெங்கசாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரி கணேஷ், வருவாய் ஆய்வாளர் வீரகுமார் மற்றும் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img