தமிழக முதல்வர் உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் முனியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒட்டப்பிடாராம் ஒன்றிய துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் பேவர் பிளாக்சாலை, சிமெண்ட் சாலை, சமுதாய நலக்கூடம், வாறுகால் வசதி, மகளிர் குழு கட்டிடம், அங்கன்வாடி மையம் அமைக்க கோரியும், சுடுகாடு கொட்டகை அமைத்தல் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் வீரலட்சுமி, வார்டு மெம்பர்கள் மூக்கையா, வீரபத்திரன், தங்கமாரி, லூர்துமேரி மற்றும் பஞ்சாயத்து பற்றாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல், மற்றும் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊர் பெரியவர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.