மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளை ஜப் பான் நாட்டில் சமீபத் தில் துவங்கப்பட்டது. அதன் முதல் நிகழ்ச்சியாக பாரதி பிறந்த நாள் விழா தலை நகர் டோக்கியோவில் டிசம்பர் 10ல் நடைபெற்றது.
பேரவையின் நிறுவனரும் தலைவருமான த. ஸ்டா லின் குணசேகரன் இணைய வழியாக ‘ பேரவையின் நோக் கமும் தேவையும்’ என்ற தலைப்பில் விளக்கவுரை யாற்றினார்.
இவர் தனது உரையில் “ஜப்பான் நாட்டிற்கும் தமிழகத்திற்குமான நட்புறவுப் பாலமாக அங்கு தொடங்கப்பட்டுள்ள பேரவையின் கிளை திகழும் என்றும் தலைசிறந்த ஜப்பானிய மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வரும் பணியையும் பேரவை பொறுப்பேற்றுச் செய்யும் என்றும் குறிப்
பிட்டார்.
பாரதியின் தாய் மாமாவின் பேத்தியான உமா சுகவனம் , கொள்ளுப் பேத்தி ஜெயஸ்ரீ சுப்ரமணியம் ஆகியோர் இணைய வழியாக வாழ்த்துரை வழங் கினர்.
பேரவை ஜப்பான் கிளை ஆலோசகர் ச. கமலக்கண்ணன், தலைவர் வே. கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ச.சே. ராஜ லக்ஷ்மி, ஜப்பான் தமிழ் அறிஞர்கள் மு. அசோக், வ.ஆறுமுகம், ரா.செந்தில் குமார், கு.கோவிந்தராஜன் கருத்துரை வழங்கினர்.
டோக்கியோ நகரில் பாரதி விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. பேரவை ஜப்பான் கிளை சார்பில் தனித்திறன்மிக்க மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



