தமிழ் மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை
முன்னிட்டு பொங்கலூரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்றோர் – மாற்றுத்திறனாளி – முதியோர் இல்லத்தில் கழகத்தின் தலைவர் முத்து முஹம்மது தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
கணக்கம்பாளையம், கூத்தம்பாளையம், பாண்டியன் நகர் பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கினார்கள். கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கிருபானந்தன், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.