தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கோவையில் பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ். புரம், மற்றும் சேலம், திருப்பூர், மேட்டுப்பாளையம், கொச்சி மற்றும் மூலந்துருத்தி ஆகிய இடங்களில் தனது கிளைகளை துவக்கி செயல் பட்டு வருகிறது லோட்டஸ் கண் மருத்துவமனை.
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக, லோட்டஸ் கண் மருத்துவமனையில் நேரடி தொடுதல், கூர்நுண் கருவி இல்லா (டச்லஸ், பிளேடு லஸ்) அதிநவீன லாசிக் வசதியை வசதியை, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசியதாவது:
அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாட்டு மக்கள் மருத்துவ சேவைக்கு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.
இந்த லோட்டஸ் கண் மருத்துவமனையில் புதியதாக துவக்கப்பட்டுள்ள சிகிச்சை ஆனது தமிழகத்தில் இரண்டு இடங்களில் தான் உள்ளது. ஒன்று கோவை லோட்டஸ் மருத்துவமனை, மற்றொன்று சேலம் லோட்டஸ் மருத்துவமனை.
தமிழ்நாடு இன்று மருத்துவத்துறையில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மிகச் சிறந்த இடத்தை பெற்று உலகிலேயே தனி சிறப்பு வாய்ந்ததாக வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்கு இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிநாட்டில் உள்ளது போல் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் ஏராளமாக உள்ளது.
கடந்த வாரம் 10 வெளிநாட்டு குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வார்கள், ஆனால் தற்போது நிலைமை மாறி வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற அதிகமானோர் வருகிறார்கள்.
முதல்வர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் தான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தில் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், தோல், எலும்பு மச்சை, எலும்பு மாற்று சிகிச்சை போன்ற உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்ப டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்
இது குறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின், நிர்வாக இயக்குனர், சங்கீதா சுந்தரமூர்த்தி கூறும்போது , கண் மருத்துவ சிகிச்சையில் முன்னோடியாக திகழும் லோட்டஸ் கண் மருத்துவமனை, தற்போது சேலம் நகரில் முதல் முறையாக நேரடி தொடுதல், கூர்நுண் கருவி இல்லா (டச்லஸ், பிளேடு லஸ்) லாசிக் சிகிச்சை முறையை அறிமுகம் செய்கிறது. கண்ணாடியில்லாத துல்லிய பார்வையை விரும்பும் பல்வேறு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும், என்றார்.
விழாவில், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ஏ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.