fbpx
Homeபிற செய்திகள்எல்ஐசியின் ‘ஜீவன் உத்சவ்’ புதிய திட்டம் அறிமுகம்

எல்ஐசியின் ‘ஜீவன் உத்சவ்’ புதிய திட்டம் அறிமுகம்

நேற்று எல்ஐசி ஆப் இந்தியா “ஜீவன் உத்சவ்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 90 நாள் குழந்தை முதல் 65 வயது உள்ள அனைவருக் கும் ஏற்ற திட்டமாகும்.

பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை தேர்ந் தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் காத்தி ருப்பு காலத்திற்கு பின், ஆண்டுதோறும் காப்பீட்டுத் தொகையின் 10 சதவீத தொகையை உத்திரவாதமாக பெறக் கூடிய வாய்ப்பு அல்லது பாலிசிதாரரின் விருப்பப் படி, அத்தொகையை 5.5% கூட்டு வட்டியோடு அவர் விரும்பிய கால கட்டங்களில், எப்போது வேண்டுமானாலும், அதிக பட்சமாக 75% வரை எடுத்துக்கொள்ளும் வசதி இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

இது மட்டுமின்றி ஆயுள் காலம் முழுவதற் கும் இன்சூரன்ஸ் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடும் உள்ளது. எனவே இத் திட்டம் பென்ஷன், இன் சூரன்ஸ் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு பரிசாக தாத்தா, பாட்டியும் கொடுக்க முடியும்.

இந்தத் திட்டம் நேற்று எல்ஐசி யின் தலைவரால் அகில இந்திய அளவில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் கோவை யில், முதுநிலை கோட்ட மேலாளர் டி.பி. ராஜேந்திர குமார் அவர்கள் தலைமையில், இந்தியன் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஆர். ஸ்ரீனிவாசனால் தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கோவை கோட்டம் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன், அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img