fbpx
Homeபிற செய்திகள்யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்க விழா

யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்க விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிந்தனை கவிஞர் முனைவர், கவிதாசன் (இயக்குனர், ரூட்ஸ் இந்தியா மற்றும் செயலாளர், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி) கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி தமிழ் மன்றத்தை துவக்கி வைத்தார்.

கவிதாசன் பேசுகையில், லட்சியவாதிகளை உருவாக்குவதே தனது லட்சியமாக கொண்டு செயல்படுகிறேன். இன்று உங்களுடன் உரையாடும் இந்த தருணம் நான் லட்சியவாதிகளை உருவாக்கியதாக எண்ணுகிறேன். நாம் அனைவரும் கடிகாரத்தின் முட்களாக இருந்து செயல்படுவது முக்கியமல்ல அந்த முட்களில் நொடி முள்ளாக வேகமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்ற கனியை சுவைக்க இயலும் எனப்பேசி, மாணவப் பருவத்தில் மாணவர்கள் எவ்வாறு சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார், கல்லூரியின் நிறுவனரும் மற்றும் தலைவருமான பொறியாளர் சு.சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சின்னராசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img