கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி – ஹெல்த், வெல்நெஸ் கிளப், யூத் ரெட் கிராஸ் கிளப், அலெர்ட் என்ஜிஓ (ALERT NGO) குழு சார்பில் கடந்த 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
7019 மாணவிகள் ரத்தக்கசிவு, எலும்பு முறிவு, சுவாச அடைப்பு, மயக்கம் போன்ற அவசரநிலைகளில் முதலுதவி செய்வது மற்றும் சிபிஆர் பயிற்சி பெற்று, சமூகத்திற்கு பணியாற்ற 7019 பேர் (COMMUNITY FIRST RESPONDERS)
உருவாக்கப்பட்டுள்ளனர்.
அலெர்ட் என்ஜிஓ அமைப்பின் குறிக்கோள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அ.ப.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பார்வைபடி “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவசர உதவி பயிற்சி அளிக்க வேண்டும்” என்பதாகும்.

அந்த நோக்கத்திற்கிணங்க, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மொத்தம் 7019 மாணவிகள் முதலுதவி பயிற்சியில் பங்கேற்று, உயிர் காக்கும் திறன்களைப் பெற்றனர். இதன் மூலம், சமுதாயத்தில் அவசர சூழ்நிலைகளில் துணிச்சலுடன் செயல்படக்கூடியவர்களாக அவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பது பெருமைக்குரியது.
இந்த பயிற்சியில், மருத்துவர் அல்லாத பொதுமக்கள் எவ்வாறு மருத்துவ அவசரநிலையில் செயல்பட வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பன மாணவிகளுக்கு விளக்கப்பட்டன.
குறிப்பாக, ரத்தக்கசிவு, எலும்பு முறிவு, சுவாச அடைப்பு, மயக்கம் போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவி செய்வது என்பதை மாணவிகள் கற்றுக் கொண்டனர். மேலும், சிபிஆர் முறைகள் நேரடி கையாளுதல் மற்றும் விளக்கங்களுடன் பயிற்றுவிக்கப்பட்டன .

அதோடு, Good Samaritan Law எனப்படும் சட்டத்தின் முக்கியத்துவமும் விளக்கப்பட்டது; அதாவது, மருத்துவ அவசரநிலையில் உதவி செய்யும் நபர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதை மாணவிகள் அறிந்துகொண்டனர்.
இந்த முகாம், மாணவிகளின் அவசரநிலை செயல்திறனை மேம்படுத்தியதோடு, சமுதாயத்தில் பொறுப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



