fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி கோனே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி கோனே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கோனே நிறுவனத்துடன் இணைந்து ‘சிறப்பு ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்பட்டது. செங்குத்து இயக்கம் துறையில் தொழில்–கல்வி இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

இந்த மையத்தை கோனே நிறுவனத்தின் மக்கள், தொடர்பு மற்றும் சமூகப் பொறுப்பு பிரிவு மூத்த இயக்குநர் எம்.பி. சரவணன் திறந்து வைத்தார். நவீன செங்குத்து போக்குவரத்து அமைப்புகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிறுவல் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த நடைமுறை அனுபவத்தை மாணவர்கள் பெறும் வகையில், லிஃப்ட் தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக நவீன உபகரணங்கள் மற்றும் சிமுலேஷன் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் எம்.பி. சரவணன் பேசுகையில், “எதிர்கால தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்ய கல்வி நிறுவனங்களும் தொழில்துறையும் இணைந்து செயல்படுவது அவசியம். உலகத் தரத்திற்கேற்ற திறன் அடிப்படையிலான கல்வியே மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும்,” என்றார்.

இம்முயற்சி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, லிஃப்ட் பொறியியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும். மேலும், இன்டர்ன்ஷிப், சான்றிதழ் படிப்புகள் மற்றும் தொழில்துறை இணைப்பு திட்டங்களுக்கு வாய்ப்புகள் உருவாகும் என்று கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதில் கோனே நிறுவனத்தின் கொட்ரேஷ் ஜோகிகல்மத், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். தேவிபிரியா, தொழில் வளர்ச்சி மைய இயக்குநர் முனைவர் தாமரைக்கண்ணன், மெக்கானிக்கல் துறைத் தலைவர் முனைவர் எஸ். ரமேஷ் பாபு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img