fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கல்லூரியில் ‘பிசிஷியன் 2K26’ தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

கொங்குநாடு கல்லூரியில் ‘பிசிஷியன் 2K26’ தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவையில் தேசிய அறிவியல் தினம் 2026 முன்னிட்டு “பிசிஷியன் 2K26” எனும்
கல்லூரிகளுக்கிடையேயான இயற்பியல் அறிவியல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வை கல்லூரியின் இயற்பியல் துறை, கொங்குநாடு வானியல் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக இயற்பியல் துறை முன்னாள் மாணவரும், அட்ராக்ட் லைப் அண்ட் ஹெல்த் இன் ஜெனரல் மற்றும் கார்பரேட் லீடர்சிப் பேக்டரி நிறுவனங்களின் இயக்குநருமான காயத்ரி நாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

அறிவியல் சிந்தனை வளர்த்தல், புதுமை திறனை ஊக்குவித்தல் மற்றும் கல்வித் திறனை மேம்ப டுத்துதல் ஆகியவை நிகழ்வின் நோக்கமாக அமைந்திருந்தது.

இளங்கலை மாணவர்களுக்கான போட்டிகளில் இயற்பியல் வினாடி-வினா, டிஜிட்டல் போஸ் டர் வடிவமைப்பு, நினை வாற்றல் சோதனை, சர்க் யூட் கிரேஸ் (மின்னணு செய்முறை), இயற்பியல் டம்ப்-சி, இயற்பியல் ரங்கோலி, புகைப்படப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முதுகலை மாணவர்களுக்காக மேம்பட்ட வினாடி-வினா, ஆய்வுக் கட்டுரை விளக்கக் காட்சி, இயற் பியல் மாதிரி வடிவமைப்பு மற்றும் சிறந்த ஆராய்ச்சி விளக்குபவர் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் மொத்த சாம்பியன் பட் டத்தை கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம் மாள் மகளிர் கல்லூரி கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது.

மூன்றாம் இடத்தை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விஸாலாட்சி மகளிர் கல்லூரி பெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யு.ஜி மற்றும் பி.ஜி பிரிவுகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img