fbpx
Homeபிற செய்திகள்கொங்கு திவ்ய தேசம் நூல் - செ.ம.வேலுசாமி வெளியிட்டார்

கொங்கு திவ்ய தேசம் நூல் – செ.ம.வேலுசாமி வெளியிட்டார்

சூலூர் தமிழ் சங்கத்தின் சார்பில் “வெம்பா சித்தர்” சூலூர் கலைப்பித்தன் எழுதிய கொங்கு திவ்ய தேசம் எனும் கொங்குமண்டலத்தை சுற்றியுள்ள பண்டைய கால 22 பெருமாள் திருத்தலங்களின் தலவரலாறு நூல் வெளியீட்டு விழா சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

புத்தகத்தை முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ.ம. வேலுச்சாமி வெளியிட்டு பேசினார். புத்தகம் உருவாக்குவதற்கு நூல் ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் அவர் கொங்கு திவ்ய தேசங்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கொண்டதற்கும் பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துக் கொண்டார்.

அறக்கட்டளை

புத்தகத்தின் முதல் படிகளை சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், தாசபளஞ்சிக சமூகத்தினரின் அறக் கட்டளையின் செயல் தலை வர் டாக்டர் ரவிக்குமார், தாசபளஞ்சிங்க சமூகத்தின் அறக்கட்டளை தலைவர் திருவேங்கடம், புதூரர் திருத்தேர் அறக்கட்டளைத் தலைவர் தங்கவேலு, கலங்கல் ஊராட்சி தலை வர் ரங்கநாதன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், காளியாபுரம் சோமசுந்தரம், முன்னாள் சிறைத்துறை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, முன்னாள் ஆயுள் காப்பீட்டு கழகம் ராமச்சந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பசுமை நிழல் விஜயகுமார், V.வீராசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக ராகவன் வரவேற்றுப் பேசினார். திருவேங்கடநாத பெருமாள் வழிபாட்டு குழு தலைவர் தேவராஜன், நூல் ஆசிரியர் சூலூர் கலைப்பித்தன் ஆகி யோர் முன்னிலை வகித்து நூல் மங்களா சாசனம்பாடி நூலின் அம்சங்களை எடுத்துக் கூறினர்.

மங்களா சாசனத்தை திருக்கோயில் பட்டாட்சியர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ரமணி பிரசாந்த் வாழ்த் துரை வழங்க தமிழ்ச் சங்க தலைவர் சூ.சு. பொன்முடி பதிப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமிக்கு அருட்கொடை வள்ளல் என்கின்ற பாராட்டுபட்டத்தை கொடுத்து கௌர வித்தினர். சூலூர் தமிழ் சங்கத்தின் பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். பசுமை நிழல் சுந்தர்ராஜன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு செ.ம. வேலுச்சாமி கொங்கு திவ்யதேசம் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.

படிக்க வேண்டும்

spot_img