பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் 24-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரியின் செயலரும், பயனீர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான அபர்ணா ராஜ்குமார் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர் வரவேற்றார்.
கல்லூரியில் உள்ள நான்கு விளையாட்டு அணிகளின் அணிவகுப்பு நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக ஸ்கேபெண்ட் நிறுவனத் தின் தலைவர் நித்ய கல் யாணி சதீஷ், யங் இந்தியா அமைப்பின் நிர்வாகி அபிலாஷா தாமோதிரன் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விழாவைத் தொடக்கி வைத்தனர்.
சாம்பியன் பட்டம்
கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் அணிகளுக்கிடையே ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டத்தை வென்ற ‘சிறுத்தை’ அணிக்கு சி.ஆர்.விஸ்வநாதன் நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.
தனி நபர் ஆடவர் பிரிவில் தொழில் நுட்பவியல்துறையின் முதலாமாண்டு மாணவர் பி.நவீன்குமாரும், பெண்கள் பிரிவில் வணிகவியல் துறையின் முதலாமாண்டு மாணவி எஸ்.மான்யாவும், தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களுக்கு நித்ய கல்யாணி, அபிலாஷா தாமோதிரன் ஆகியோர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீதர், விளையாட்டுப் பிரிவு மாணவ நிர்வாகிகளான பி.லெவின்மேரி, வி.பிரகாஷ், சி,வைரக்கண்ணு, ஆர்.காவ்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.