இந்திய அரசின் உயர் நிலை பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 21 இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை ஏப்ரல் 16 அன்று யு பி எஸ் சி நிறுவனம் வெளியிட்டது.
இந்த வருடம் 1016 தேர்வர்களை வெற்றி யாளர்களாக அறிவித்துள்ள முடிவுகளில் பிர பல கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
2வது ஆண்டாக கிங் மேக்கர்ஸ் அகாடமி மாணவர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் மாணவரான மேதா ஆனந்த் 13ம் இடமும், குணால் ரஸ்தோகி 15ம் இடமும், அயன் ஜெயின் 16ம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.