fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு கேரள அரசு மரியாதை

ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு கேரள அரசு மரியாதை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வரலாற்று சிறப்புமிக்க மலையாள உரையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கேரள அரசு மாதா அம்ருதானந்தமயி தேவியை (அம்மா) கௌரவித்தது. அம்ருதபுரி வளாகத்தில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவின் போது இந்த பாராட்டு வழங்கப்பட்டது. கேரள மாநிலத்தின் சார்பாக கலாச்சார அமைச்சர் சஜி செரியன் அம்மாவை கௌரவித்தார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் சஜி செரியன், அம்மா மலையாள மொழி மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உலகிற்கு வெளிப்படுத்தியதாக கூறி னார். “ஐ.நா.வில் மலையாளத்தில் உரையாற்றியதன் மூலம், அம்மா தங்கள் தாய் மொழியை மறப்பவர்களுக்கு ஓர் உன்னத செய்தியை வழங்கினார். இந்த அங்கீகாரம் வெறும் மரியாதை மட்டுமல்லாது, கலாச்சார விழிப்புணர்வும் ஆகும்,” என்று அவர் கூறினார். மேலும் அவர் முதலமைச்சரின் வாழ்த்துக்களையும் அம்மாவுக்கு தெரிவித்தார்.

இந்த கௌரவத்தை மலையாளத் திற்கே அர்ப்பணிக்கும் அம்மா, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை அந்த மொழியை நேசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அம்மாவின் வார்த்தைகள் மலையாளத்தை உலக அரங் கிற்கு உயர்த்தியதாக திருக்காக்கரை எம் எல் ஏ உமா தாமஸ் குறிப்பிட்டார்.

மேலும் கருநாகப்பள்ளி எம்எல்ஏ சி.ஆர்.மகேஷ் அம்ருதபுரி உலகிற்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது என்று கூறினார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஐ.ஜி லக்ஷ்மன் குகுலோத் ஐபிஎஸ், கேரள சட்ட அகாடமி இயக்குநர் நாகராஜ் நாராயணன், நடிகர் தேவன், மருநாடன் மலையாளி தலைமை ஆசிரியர் ஷாஜன் ஸ்கரியா ஆகியோர் அம்மாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாதா அம்ருதானந் தமயி மடத்தின் துணைத்தலைவர் ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தபுரி வரவேற்புரையாற்றினார். ஸ்வாமினி சுவித்யாம்ருதப்பிராணா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img