fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் பிரபல துப்பாக்கி சுடுதல் வீரருக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

இந்தியாவின் பிரபல துப்பாக்கி சுடுதல் வீரருக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

கேரளா மாநிலம் மூணாரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்த பிரபல துப்பாக்கி சுடுதல் போட்டி விளையாட்டு வீரரும், எஸ்.ஜி.ஏ.டி.எப்-ன் சி.இ.ஓ.வுமான சிவம் தாகூரை கோவை விமான நிலையத்தில் TNSGADF மாநில செயலாளர் முத்துராஜ், வடவள்ளி வருண், தற்காப்பு கலைக்கூடம் மற் றும் கோகுல் சிலம்பம் அகாடமி பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் சால்வைகள், மலர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர் களை சந்தித்த சிவம் தாகூர் கூறுகையில், “மூணாரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் விளையாட்டு வீரர் கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தேசிய அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் உலகம் முழுவதும் எங்களுடைய SGADF அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் நான் எனது 14 வது வயதில், கேரளாவுக்காக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டேன். இந்தியா தற்போது விளையாட்டு துறையில் மிகவும் முக் கியமான நிலையை அடைந்துள்ளது. அதன் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த SGADF என்று அறக்கட்டளைகளை நான் உருவாக் கினேன். அதன் மூலம் பல்வேறு நாடுகளில் நமது இளைஞர்கள் கலந்து கொண்டு நமது இந்திய நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். நான் இதுவரை 19 தங்கம், 7 வெள்ளி பதக்கமும் இந்தியாவுக்காக விளையாடி வாங்கி உள்ளேன். மேலும் எங்கள் நிறுவனம் வழங்கும் சான் றிதழ் மூலம் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.

எங்கள் நிறுவனம் மூலம் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான போட்டிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான வீரர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருவது பார்க்க முடிகிறது. இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டி மிகவும் கடுமையானது இதில் எனது பயணம் மிகவும் கடினமாக இருந் தது. இருப்பினும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற் றேன். இது போன்ற போட் டியில் கலந்து கொள்ள நம் இளைஞர் அனைவரும் முன்வர வேண்டும்“ என் றார்.

படிக்க வேண்டும்

spot_img