fbpx
Homeபிற செய்திகள்சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மருத்துவ கூட்டாளியாக இணைந்த காவேரி மருத்துவமனை

சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மருத்துவ கூட்டாளியாக இணைந்த காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை அறிவித்துள் ளது. இது காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

விளையாட்டு மருத்துவத்தில் காவேரியின் நிபுணத்துவம் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்வதோடு, விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் காவேரி மருத்துவமனை வலுவான நற்பெயரைக் கொண்டுள்ளது.

மைதானத்தில் அவசரகால உதவி, துல்லியமான நோயறிதல் முதல் மேம்பட்ட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வரை முழுமையான பராமரிப்பை இந்தக் குழு உறுதி செய்கிறது.

இந்நிகழ்வில் பேசிய காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், “ சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான இந்தக் கூட்டாண்மை, விளையாட்டு வீரர்களுக்கு வேகம், துல்லியம் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புடன் ஆதரவளிக்கும் எமது தயார் நிலையை வெளிப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டார்.

இந்த இணைப்பு குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன், “திறனும் அனுபவமும் ஒருங்கிணைந்த கலவையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சரியான சுகாதார சேவை கூட்டாளியாக காவேரி மருத்துவமனையை ஆக்கியிருக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img