கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரா வர்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி உமா மகேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-அம்பிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 சுஜாதா, விரைவு நீதிமன்ற நீதிபதி நித்தியா, வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் 62 நபர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பாக்கியம் மேற்கொண்டார். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.



