ஜித்தோகுகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பாக மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை தேர்வு முகாம் அகில இந்திய பொதுச் செயலாளர் சென்சாய் முத்துராஜூ தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் தேர்வாகிய மாணவ மாணவிகளுக்கு ஈரோடு வேளாளர் கல்லூரியின் தாளாளர் சந்திரசேகர், தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணி தலைவர் யுவராஜா மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கினார்கள்.
இதில் சுபான்.சண்முகம், விஜயகுமார், பிரேம் பகதூர், கோவிந்தராஜ், சந்திரசேகர், கீர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சக்திவேல் ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர், செய்திருந்தார்.



