ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் 37 வது பட்டமளிப்பு விழா, வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இணைவேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ் சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், போர்ட் ஆப் மேனேஜ்மெண்ட் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் .
ஆராய்ச்சி, பொறியியல், கலை, அறிவியல், கட்டடக்கலை, வணிகவியல், மேலாண்மை, அலைடு ஹெல்த் அறிவியல், சமூக நலன், வேளாண்மை , தோட்டக்கலை படிப்பு இளங்கலை,முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 47, வாய் பேசாத காது கேளாத மாணவர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 2145 பேருக்கு சிறப்பு விருந்தினர்கள், ஹைச்பிஇ கம்பெனிகளின் சர்வதேச சப்போர்ட் இயக்குநர் கிரிராஜன்மெஞ்ஞானம், துபாய் சிராஜ் கம்பெனி நிர்வாக இயக்குனர் காதிர் பீர் செரிப் ஆகியோர் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரையாற்றினர். பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.