கையால் நெய்யப்படும் கம்பள உற் பத்தியில் புகழ் பெற்ற நிறுவனமாக திகழும் ஜெய்பூர் ரக்ஸ், அதன் வருடாந்திர ‘கம்பள விரிப்புகள் திருவிழா 2023’ஐ நேற்று தொடங்கியது.
இது குறித்து ஜெய்பூர் ரக்ஸ் இயக்குநர் யோகேஷ் சவுத்ரி கூறியதாவது: எங்கள் நெசவாளர்களின் வாழ்க் கையில் மகிழ்ச்சி மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
இந்த ஆண்டு இந்த திருவிழா மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஜேஆர் மெரிட்டோரியஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் நெசவாளர்களின் குழந்தைகளுக்கு வழங்க இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த திட்டம் பொதுத் தேர்வுகளில் 75% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் உயர்கல்விக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், இந்த இளம் திறமையாளர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் அவர்களின் முழுத் திறனை உணர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம் என்றார்.
இந்த ஆண்டு கம்பள விரிப்புகள் திருவிழா கலைத்திறன், கைவினைத்திறன் மற்றும் கல்வியின் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது.
எங்களின் அற்புதமான கம்பள சேகரிப்புகளை பார்த்து ரசித்து வாங்கவும், எங்கள் நெசவாளர்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபடவும், தகுதியான மாணவர்க ளின் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் பங்கேற்க வாருங்கள் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
www.jaipurrugs.com ஐ பார்க்கலாம்.
துரிஸ், ஹேண்ட் டப்ட், கைத்தறி மற்றும் கை முடிச்சுகள் மற்றும் மஞ்சஹா சேகரிப்பு கம்பள விரிப்புகளுக்கு சிறப்பான தள்ளுபடி வழங்கப்படுவதோடு, இதன் தயாரிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம்.
பல்வேறு வகையான விரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு 10% முதல் 80% வரை தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.