கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சேவையாக அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தல்களை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
ராஜஸ்தானி சங்கம் வர்த்தகப் பகுதியின் மையப் பகுதி, தடாகம் சாலையில் உயர்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில், காந்திபார்க் பேருந்து நிலையம் உள்பட மொத்தம் 9 நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, காந்திபுரம் பகுதியில் நடமாடும் வாக னம் மூலமும் நீர்மோர் வழங்கப் படுகிறது. இந்தச் சேவை அடுத்த 90 நாட்களுக்கு, தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
ஜெகன்னாத் பிராப் பர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் திபர்வால் கூறுகையில், “சுத்தமான நீர் மோரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன், தாகமும் தீருகிறது” என்றார்.



