Homeபிற செய்திகள்பல்துறை ஆராய்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கம்

பல்துறை ஆராய்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கம்

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் கணிதத்துறை சார்பில், “கணிதம் மற்றும் பெருந்தரவின் விரிவடையும் நோக்கம் மற்றும் சமூகத்தொடர்பு” என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த மாதம் 26 முதல் 28ம் தேதி வரை நேரடி மற்றும் இணைய வழி என இருவகை முறைகளில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் 12 தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 15 வளமையாளர்கள் (Resource Persons), 90 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 63 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் முனைவர் என்.யசோதா தேவி வர வேற்புரையாற்றினார்.


பாரதியார் பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை முன்னாள் தலைவர் முனைவர் பி. கந்தசாமி தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, கருத்தரங்கின் ஆய்வுகள் வெளி யிடப்பட்டது.


டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) வளிமண்டல அறிவியல் மையத்தைச் சேர்ந்த முனைவர் மைதிலி சரண் சிறப்புரையாற்றினார்.


முதல் தொழில்நுட்ப அமர்வில் சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குநர் (ஓய்வு) பாலச்சந்திரன் உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹாரதி நன்றியுரை வழங்கினார்.

கணிதத்துறை தலைவர் சுமதி வரவேற்பு ரையாற்றினார். இக்கருத் தரங்கிற்கு நிதியுதவி வழங்கிய அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.


பெரியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேல் நிறைவு விழா உரையாற்றினார். இவ்விழாவில், சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கணிதத்துறை உதவிப்பேராசிரியர் லட்சுமி நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img