fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களுக்கு பாராட்டு

சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களுக்கு பாராட்டு

சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டி அண்மையில் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற கரூர் பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மற்றும் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெச்சத்தகுந்த புள்ளிகளைப் பெற்று பாராட்டுச் சான்றிதழையும் பரிசுத்தொகையையும் பெற்று அபார சாதனைப் புரிந்துள்ளனர்.

சர்வதேச போட்டியில் பங்கு பெற்று கரூருக்கு பெருமை சேர்த்த பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோ கனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.

பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் க.சேகர் ஆகியோர் சாதனையை பாராட்டி வாழ்த்தினர்.

மேலும் துணை முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சேவுக கங்காதரன், சந்திரமோகன், சதுரங்கப் பயிற்சியாளர்கள் புகழேந்தி, சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img