Homeபிற செய்திகள்தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் விளக்க புத்தகம் வெளியீடு

தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் விளக்க புத்தகம் வெளியீடு

கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதனை இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்து, சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img