fbpx
Homeபிற செய்திகள்அரசுக்கு இந்திய பருத்தி கூட்டமைப்பு கோரிக்கை

அரசுக்கு இந்திய பருத்தி கூட்டமைப்பு கோரிக்கை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அலுவலகத்தில் இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் செய் தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய பருத்தி கூட்ட மைப்பு சார்பில் அகில இந்திய அளவில் கருத்த ரங்கம் 9, 10 ம் தேதிகளில் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதில் பருத்தி தொடர்பான பிரச்சி னைகள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு நாடுகளில் இருக்கும் பருத்தி தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்க இருக்கின்றோம். தற்போது
இந்திய பருத்தி விலை அதிகம், மற்ற நாடுகளில் பருத்தி விலை குறைவு. இதனால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதனை மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பருத்தி தொடர்பான உலகளாவிய அறிவுகளுடன் திரும்பி செல்ல முடியும். இது இநதிய பருத்தி கூட்டமைப்பின் ஆறாவது கருத்தரங்கம் ஆகும். தற்போது பருத்தி ஒரு கண்டி விலை 57 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைவு என்பதால் விலை அதிகமாக இருக்கிறது. பருத்தி விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு பருத்தியை விற்பனையாளர்கள் விற்காமல் வைத்திரு க்கின்றனர். இதனால் பஞ்சாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாலை தொழில் கடந்த வருடம் மோசமாக இருந்தது, இந்த வருடம் சற்று முன்னேற்றமாக இருக்கிறது.

பங்களா தேச நாட்டில் அரசியல் குழுப்பமான சூழல் நிலவுவதால் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பங்களாதேச ஜவுளிக்கும், வியட்நாம் ஐவுளிக்கும் அமெரிக்காவில் வரி குறைவு, இந்திய ஐவுளிகளுக்கு வரி அதிகம். பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கின்றனர்.

பருத்தி விளைச்சல் அதிகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்தியாவில் 49 மாவட்டங்களில் பருத்தி விளைகின்றது. அந்த மாவட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கவனம் செலுத்தினால் , நாட்டில் பருத்தி உற்பத்தி 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பருத்தி க்கும் அரசு கொடுக்க வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சில சலுகைகள் கொடுப்பதால் தமிழகத்தில் இருந்து சில கார்மென்ட் நிறுவனங்கள் அங்கு சென்று இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் கலாச்சாரம், பாதுகாப்பு போன்றவை மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்காது.

அங்கு மின்சாரம் யூனிட் ரூபாய் 4.25 கொடுக்கின்றனர் எனவும் , இங்கு 9 ரூபாய் வரை யூனிட்டிற்கு வசூல் செய்யப்படுகின்றது. இவ்வாறு துளசிதரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img