fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அதிநவீன விரிவுரை படப் பிடிப்புத்தளம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அதிநவீன விரிவுரை படப் பிடிப்புத்தளம் துவக்கம்

கோவை துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்அதி நவீன விரிவுரை படப் பிடிப்பு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியை எஸ்.என் ஆர்சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக, இக்கல்லூரியில் பயின்றவரான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், எவரெஸ்ட் மாரத்தானை வென்ற நௌஷீன் பானு சந்த் மற்றும் லவ்லி டிரெயில்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர் வாக அதிகாரியுமான டி.எம். இஷாக் முகமது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தளம் வெவ்வேறு தொழில் துறையை சேர்ந்த நிபுணர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் ஆன்லைனில் படிப்புகளை வழங்குவதற்காக தற்காலதொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்டுடியோ, ஆசிரியர்க ளின் விரிவுரைகளைப் பதிவுசெய்து அவர்களின் கற்பித்தல் கற்றல் செயல்முறையை பின்னூட்டத்துடன் மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறனை வளர்ப்பதற்கும் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். விழாவிற்கு டாக்டர் என்.ஆர். அலமேலு, இயக்குநர் (கல்வித்துறை), முனைவர் பி.கருப்புசாமி, முதல்வர் (பொறுப்பு) மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img