fbpx
Homeபிற செய்திகள்தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகத்தை துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தொடங்கி வைத்தார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண் ணப்பங்கள் வினியோகம் தொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதி ரேசன் தலைமை தாங்கி விண்ணப்ப வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதி ரேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் தற்போது தொடங்கியுள்ளது.125 பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு 29 ஆயிரத்து 754 மாணவ,மாணவிகள் பல் வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டு அதனை அதிகப்படுத்தி சுமார் 45 ஆயிரம் மாணவர்களை சேர்க்க இலக் காகவைத்திருக்கிறோம்.இந்த ஆண்டு தொலைதூரக் கல்வி மையத்தில் எம்.பி.ஏ., எம். சி.ஏ. பி.சி.ஏ. போன்ற பாடப் பிரிவுகளுக்கு உரிய அனுமதியை பெற்று இருக்கிறோம்.விரைவில் இணைய கல்வியை கொண்டு வர இருக்கிறோம்.

இதன் மூலமாக அதிக மாணவர்களை சென்றடைவோம்.இந்தாண்டு கூடுதலாக 6 பாடப்பிரிவுகளுக் கான அனுமதியை பெற்றுள் ளோம்.வேலை வாய்ப்புடன் கூடிய 20 பட்டய படிப்புகளை கொண்டுவரவும் இருக் கிறோம்.தமிழகம் முழுவதும் உள்ள கற்றல் ஆதரவு மையங்களை விரைவில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து செயல்படுத்த இருக்கிறோம்.

மாணவர் சேர்க்கையை உறுதி செய்தல், பாடப் புத்தகங்களை விரைவாக வழங்குதல்,மாணவர்க ளின் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்றவற்றை துரிதமாக செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பதிவாளர் (பொறுப்பு) ஆர்.சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம் பிரகாஷ்,தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மைய இயக்குனர் டி.சீனிவாசன்,இணை இயக்குனர் விஜயன்,துணை இயக்குனர் சீனிவாசன், கல்லூரி வளர்ச்சி குழு மதிப்புறு ஆசிரியர் கண்ணப்பன், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ்,மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.ரத்ன சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img