fbpx
Homeபிற செய்திகள்ஐஐடி கான்பூர், அப்போலோ மருத்துவமனை- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஐஐடி கான்பூர், அப்போலோ மருத்துவமனை- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (மிமிஜி) மற்றும் அப்போலோ மருத்துவமனை, மருத்துவப் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பத்தில் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பிரிவுகளில் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆசியாவின் மிகப்பெரிய, ஒருங்கிணைந்த சுகாதார சேவை வழங்கும் நிறுவனமான அப்போலோ மருத்துவமனைக்கும், உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பம், பொறி யியல் மற்றும் கணினி அறிவியல் நிறுவனமான கான்பூர் ஐஐடி-க்கும் இடையில் இந்தப் பிரிவிலேயே முதல் முறையாக இந்த ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கான்பூர் ஐஐடி-யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஏஆர் ஹரிஷ், அப்போலோ மருத்துவமனையின் தொலை மருத்துவப் பிரிவு இயக்குநர் (அப்போலோ டெலிமெடிசின்) பேராசிரியர் கிருஷ்ணன் கணபதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போலோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில், “நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை வழங்குவதில் அப்போலோ முன்னணியில் உள்ளது.

இரண்டு மருத்துவக் கல்லூரிகள், இங்கிலாந்தில் ஒரு மருத்துவப் பள்ளி, ஒரு அப்போலோ பல்கலைக்கழகம் மற்றும் 20 நிறுவனங்கள் மூலமாக நர்சிங் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், பிஎச்.டி ஆய்வுப் படிப்புகள், சிறப்பு மருத்துவம் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டிகளில் 625 டிஎன்பி (டிப்ளமேட் இன் நேஷனல் போர்டு) இடங்கள் ஆகியவற்றில் மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன” என்றார்.

ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம்

கான்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் அபய் கரண்டிகர் கூறுகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக இருப்பதால், ஐஐடி கான்பூர் தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் அதிநவீன பல்துறை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

அப்போலோ மருத்துவமனை இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி பேசுகையில், டிஜிட்டல் ஹெல்த் தொடர்பான அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகள் வேகமாக மாறி வருவதாக கூறினார்.

கான்பூர் ஐஐடி-யின் உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறைத் தலைவர் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அமிதாபா பந்தோ பாத்யாய் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img