“ஓய்வு என்பது ஓர் இடைநிறுத்தம், நிறுத்தம் அல்ல” என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்று. அவர்களின் தற் போதைய மனப்பான்மையாக இது இருக்கிறது.
ஓய்வு திட்டமிடல் குறித்த மக்களின் மனப்பான்மையை புரிந்துகொள்வதற்கு, “இந்தியா ஓய்வு பெற ஆயத்தமாக உள்ளதா?” என்ற தலைப்பில் மிசிமிசிமி புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆய்வு நடத்தியது.
ஆய்வு
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், குவாண்டம் கன்ஸ்யுமர் சொலுஷன்ஸ் உடன் இணைந்து, ஒய்வு, பணம் மற்றும் வருடாந்திரத் திட்டங்கள் குறித்த நுகர்வோரின் மனப்பான்மையைப் புரிந்துகொள்ள 1,100 நபர்களிடம் ஆய்வு நடத்தியது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணீஷ் துபே கூறியதாவது: இந்தியாவின் ஓய்வுபெறும் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் 2031-ம் ஆண்டுக்குள் 41% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரிப்பதால், ஒரு பெரிய பிரிவின் மக்கள் நீண்ட ஓய்வுக்கு திட்டமிடுவதற்கான தீர்வுகளைத் தேடுவார்கள் என்று தெரியவந்தது என்றார்.
2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இருந்து 45 முதல் 75 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உட்பட பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து, இந்த கருத்துக்கணிப்பு ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.



