fbpx
Homeபிற செய்திகள்ரூ.26 ஆயிரம் வரை தள்ளுபடி ஐசிஐசிஐ பேங்க் அதிரடி சலுகை

ரூ.26 ஆயிரம் வரை தள்ளுபடி ஐசிஐசிஐ பேங்க் அதிரடி சலுகை

ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தின் துவக்கத்தில் உற்சாகமான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் ரூ.26,000 வரை கேஷ்பேக்குகளுடன் ஃபெஸ்டிவ் பொனான்சாஇன் இந்த அறிமுகத்தை அறிவித்தது.

ஐசிஐசிஐ பேங்க் இன் கிரெடிட்ஃடெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், ரூபே கிரெடிட் கார்டுகள் வழியாக யுபிஐ கார்ட்லெஸ் இஎம்ஐ ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளிலிருந்து பல்வேறு பொருட்களை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள்
இந்த நன்மைகளைப் பெறலாம்.

தி பிக் பில்லியன் டேய்ஸ் விற்பனைக்கு (அக்.8 முதல் அக். 15 வரை), ஃபிளிப்கார்ட்டுடன், பிக் ஃபேஷன் ஃபெஸ்டிவல் (அக். 6 முதல் அக்.19 வரை) மின்ட்ரா உடன் மற்றும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்கு (அக்டோபர் கடைசி வாரத்தில்) அமேசான் உடன் இந்த வங்கி கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், இரு சக்கர வாகனக் கடன் போன்ற சில்லறை கடன் தயாரிப்புகளில் சிறப்பு மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை விரைவில் அறிமுகப்படுத்தும்.

ஐசிஐசிஐ பேங்க் இன் செயல் இயக்குநர் ராகேஷ் ஜா பேசுகையில், பண்டிகை காலத்தில் இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்க்கும் என்றார்.

எலக்ட்ரானிக்ஸ்: எல்ஜி, சாம்சங், சோனி, யுரேகா ஃபோர்ப்ஸ், வேர்ல்பூல் மற்றும் பல முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளில் ரூ.26,000 வரை கேஷ்பேக். போஸ் வழங்கும்.

மொபைல் போன்கள்: ஆப்பிள், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஒப்போ, சியோமி மற்றும் ரியால்மி மொபைல்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி
மற்றும் இஎம்ஐ சலுகைகள், ரூ. 2,497 -ல் தொடங்கும்.

படிக்க வேண்டும்

spot_img