கிமி-இயக்கப்படும் தொடர்ச்சியான மற்றும் நேரடி தொடர்பு இல்லாத தொலை நோயாளி கண்காணிப்பு (RPM) மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (EWS) ஆகியவற்றில் சந்தை முன்னணியாளராக இருக்கும் Dozee, அதன் ‘மேட் இன் இந்தியா,ஃபார் தி வேர்ல்ட்’ (உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) அடுத்த தலைமுறை ஆம்புலேட்டரி இணைக்கப்பட்ட நோயாளி கண்காணிப்பு அமைப்பான ‘Dozee ProEx’ ஐ அறிமுகப்படுத்தியது.
அணியக்கூடிய வயர்லெஸ் சென்சார்கள் பொருத்தப்பட்ட, Dozee இன் புதிய இணைக்கப்பட்ட ஆம்புலேட்டரி தீர்வான ‘Dozee Pro Ex’ ஆனது, ECG ரிதம், இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு/நாடித் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு, சுவாச வீதம்மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட நோயாளிகளின் உயிர்ச்சக்திகளைத் தொடர்ந்து கண்கா ணிப்பதை வழங்குகிறது.
அங்கீகாரம் பெற்ற ஹெல்த்கேர் நிறுவனங்களின் (CAHO) கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் விஜய் அகர்வால் கூறியதாவது:
உடல்நல பராமரிப்பில் சிறந்து விளங்கும் நோக்கத்தில், நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தும் மற்றும் சுகாதாரச் செயல் முறைகளை ஒழுங்குப டுத்தும் புதுமையான தீர்வுகளை செயல்படுத்துவது இன்றியமையாததாக இருக்கிறது ‘Dozee Pro Ex’ என்றார்.
Dozee-ன் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ கௌரவ் பர்ச்சானி கூறியதாவது: Dozee Pro Ex மூலம், நாங்கள் பாரம்பரிய உடல்நல பராமரிப்பின் எல்லைகளைத் தாண்டி, நோயாளி படுக்கையில் இருந்தாலும், படுக்கையில் இல்லாவிட்டாலும், மருத்துவமனையில் இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் 24/7 கண்காணிக்கப்படுவதை உறுதி செய்கிறோம் என்றார்.
வெலிசிஸ் கார்ப் இன் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ ரிக் ஹாங்க்ரியுல் கிம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.