fbpx
Homeபிற செய்திகள்உயர் தொழில்நுட்ப மாநாடு: 1000 கண் மருத்துவர்கள் பங்கேற்பு

உயர் தொழில்நுட்ப மாநாடு: 1000 கண் மருத்துவர்கள் பங்கேற்பு

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை- ஐஐஆர்எஸ்ஐ 2025 மாநாடு சென்னையில் நடைபெற்றது. கண்விழி அறுவை சிகிச்சை மற்றும் பார்வை திருத்த அறுவை சிகிச்சையாக இந்த மாநாடு இரண்டு நாள் நடைபெற்றது.
இதனை மொரிஷியஸ் நாட்டைச்சேர்ந்த அமைச் சர் அனில் குமார் பச்சூ மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட் டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் இணை வேந்த ரான முனைவர் ஆர்த்தி கணேஷ், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப் பித்தார். ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் தலைவர் மருத்துவர்.சந்தன்ஷு மத்தூர் தலைமையேற்க, ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் பொதுச்செயலரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக் குழுமத் தின் தலைவருமான அமர் அகர்வால், அறிவியல் கமிட்டியின் தலைவர் மருத்துவர்.மஹிபால் எஸ். சச்தேவ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 1000 கண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆய்வாளர்கள், உலகெங் குமிலிருந்து பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் உரை யாற்றினர். நேரடி அறுவை சிகிச்சை காட்சிப்படுத்தல், கண்புரை அறுவை சிகிச்சை தொடர்பான செய்முறைப்பயிற்சி, கண் விழி அறுவை சிகிச்சை மற்றும் பார்வை திருத்த (மாற்று) அறுவை சிகிச்சை ஆகியவை நிகழ்த்தப்பட் டன.

படிக்க வேண்டும்

spot_img