fbpx
Homeபிற செய்திகள்‘ஒழுக்கமான மனிதராக வாழ வேண்டும்’ நீதிபதி வி.சிவஞானம் அறிவுறுத்தல்

‘ஒழுக்கமான மனிதராக வாழ வேண்டும்’ நீதிபதி வி.சிவஞானம் அறிவுறுத்தல்

ஹெரிடேஜ் வெல்ஃபேர் அறக்கட்டளையின் 7 வருட அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான ஆண்டு விழா ஹெரிடேஜ் மதுரை ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

ஹெரிடேஜ் வெல்ஃ பேர் அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலம்பம் மற்றும் பிற தற்காப்பு கலைகளை நிகழ்த்தி தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினர்.

ஹெரிடேஜ் வெல்ஃபேர் அறக்கட்டளையின் நிறுவனர் ருக்மணி வரவேற்றார்.
ஊடகவியலாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முதன்மை விருந்தினர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் பேசியதாவது:

ஒழுக்கம் மக்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உதவுகிறது. படித்தவர் மற்றும் மரியாதை மிகுந்தவராக இருப்பதை விட ஒழுக்கமான மனிதனாக இருப்பது முக்கியம்.

அதுமட்டுமின்றி, கண்ணியமாக இருப்பதும், அன்பான வார்த்தைகளை பேசுவதும், தமிழ்க் கவிஞர் திருவள்ளுவரின் கூற்றுப்படி, மக்கள் வெற்றிபெறத் தேவையான மற்ற சில முக்கிய குணங்கள் ஆகும். சிலம்பம் தமிழ் மக்களின் கலாசாரத்துடன் உள்ளார்ந்த தொடர்பு கொண்டது.

தற்காப்புக் கலை என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக, சிலம்பம் ஒரு கலாசார கலை என்பது மிகவும் பொருத்தமானது என்றார். முதன்மை விருந்தினர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் பேசும்போது, 1992-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பிறகு,
கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிவது தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியில் 7 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் மதுரையின் முக்கிய பிரமுகர்கள் என 250 பேர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img