12.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகளாவிய குழுமமான HCL நிறுவனம், இந்தியாவின் முதன்மையான விமர்சன-ரீதியான சிந்தனை திறனை மதிப்பிடும் தளமான -HCL ஜிக்சாவின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் பதிய திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பல அடுக்கு மதிப்பீட்டு செயல்முறை மூலம் வெற்றியாளர்களைக் கண்டறிந்து விருதுகளை வழங்கி, பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனுள்ள இளம் வயதினரின் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
பரிசுகள்
மாணவர்கள் அல்லது பள்ளிகள் போட்டியில் பங்கேற்க ஜூலை 31-க்குள் www.hcljigsaw.com ல் பதிவு செய்யலாம். HCL இன் இன்னோவேஷன் லேப்களில் கற்கும் வாய்ப்புகள் உட்பட ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.ஒவ்வொரு இறுதிப் போட்டியாளருக்கும் ரூ. 15,000 வழங்கப்படும்.
HCL பிராண்டின் அசோசியேட் துணைத் தலைவரும் தலைவருமான ரஜத் சந்தோலியா கூறியதாவது: வேகமாக வளர்ந்து வரும் இந்த உலகில் இளம் வயதினரின் புத்திசாலித்தனம் செழிக்க உதவுவதற்கு திறம்பட சிந்திக்கும் திறன்களை வளர்ப்பது அவசியம், அது தான் ஜிக்சா அடைய விரும்பும் லட்சியமாகவும் உள்ளது என்றார்.



