கோவை வடவள்ளி- மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் செ.சிவக்குமார், கோவை தெற்கு ஆர்டிஓ ராம்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ஆர்.ராஜாமணி, கோ&ஆப் டெக்ஸ் கோவை மண்டல மேலாளர் பி.அம்சவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கைத்தறி நெசவாளர்களின் கடின உழைப்பையும், இந்திய பாரம்பரிய கைத்தறித்துறையின் முக் கியத்துவத்தையும் நினைவுபடுத்தும் வகையிலும் இந்த பாரம் பரியத்தை பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்து இருந்தது. மேலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவித்து, கைத்தறித்துறை பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மூன்று நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிற்கு விற்பனையை எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர் தெரிவித்து உள்ளனர்.