Homeபிற செய்திகள்கைத்தறி தினத்தையொட்டி ஆடை அலங்கார அணிவகுப்பு

கைத்தறி தினத்தையொட்டி ஆடை அலங்கார அணிவகுப்பு

கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி இந்தியாவின் கைத்தறி தொழிலின் வளமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடியது.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து இயக்குநர் டாக்டர் அல்லி ராணி “கைத்தறி தயாரிப்புகளின் தற்போதைய மதிப்புகளை குறித்தும் அவை சுற்றுச்சூழலுக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் பயக்கும் நன்மைகளை குறித்தும் எடுத்துரைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக குணசேகரன் கலந்து கொண்டார். ரத்தினவேல், தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் கோபிநாத், கைத்தறி தொழிலதிபர் சிவகுரு, கைத்தறி நெசவாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் அஹிம்சா பட்டுக்கான தேசிய விருது பெற்ற குண சேகரன் தனது உரையில் “ஜவுளித் தொழிலில் அழியும் நிலையில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை பாதுகாக்க துணிக்கடைகளுக்கு செல்லும்போது ஒவ்வொரு வாடிக்கையாளரும் கைத்தறி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்“ என்றார். பின்னர் கோபிநாத் கைத்தறி நெசவுத் துறையில் தனது ஆராய்ச்சி மற்றும் தகவல்களை காட்சிப்படுத்தினார்.

தொடர்ந்து SVPISTM மாணவர்களால் வழங்கப்பட்ட கண்கவர் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img