fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஸ்டெம் கல்வி கருத்தரங்கு

கோவையில் ஸ்டெம் கல்வி கருத்தரங்கு

ஜிஆர்ஜி மார்டன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியானது, ஜிஆர்ஜி கல்வி குழுமங்களில் ஒன்றாகும்.
இப்பள்ளி இந்திய மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்டெம் கல்வியை மையமாக கொண்ட ஒரு அறிவூட்டும் கருத்தரங் கினை நடத்துகின்றது.

இதில், டாக்டர்.ஏ.பி.ஜெயராமன், கிருஷ்ணம்மாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஹரிதா, ஜிஆர்ஜி மார்டன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியின் முதல்வர் எம்.உமா, அருணாநாயக் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைக்கின்றனர்.

இக்கருத்தரங்கில் முக்கியப் பேச் சாளர்களாக டாக்டர்.கிருஷ்ணா, டாக்டர்.லாரா ரிச்சர்ட்ஸ், பேரா சிரியர் ரோசன், டாக்டர்.ஜெயராமன் போன்ற கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஸ்டெம் கல்வியின் தரத்தை அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆசிரியர்களுக்குத் தேவையான கருவிகளை வழங்குவதுமே இதன் இலக்காகும்.

எதிர்கால அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஜிஆர்ஜி மார்டன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளி இந்த அற்புதமான ஸ்டெம் கல்வி மூலம் கற்றல், கற்பித்தல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து அதில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் பல்வேறு செய்திகளைத் தர உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img