fbpx
Homeபிற செய்திகள்கருடா ஏரோஸ்பேஸ், சிஎஸ்கே இணைந்து நடத்திய கிராண்ட் நேஷனல் ட்ரோன் விருது வழங்கும் விழா

கருடா ஏரோஸ்பேஸ், சிஎஸ்கே இணைந்து நடத்திய கிராண்ட் நேஷனல் ட்ரோன் விருது வழங்கும் விழா

ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் இணைந்து, கிராண்ட் நேஷனல் ட்ரோன் விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது.

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.

நிகழ்ச்சியில் கருடா ஏரோஸ் பேஸ் நிறுவனம், பாதுகாப்பு, விவசாயம், வரைபடம், சுரங் கம், திட்ட கண்காணிப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் 10 வகையான ட்ரோன்களை காட்சிப்படுத்தியது. ஆளில்லா வான்வழி வாகனம் மற்றும் ராணுவ திட்டங்களுக்கான கண் காணிப்பு நடவடிக்கைகளில் திறன் கொண்ட ஹனு மான் ட்ரோனையும் கருடா ஏரோஸ்பேஸ் காட்சிப்படுத்தி யது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிவம் துபே, தீபக் சாஹர், டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ட்ரோன் துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகுதியான வெற்றியாளர்களுக்கு 16 பிரிவுகளில் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

“சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து தேசிய ட்ரோன் விருதுகள் 2023 ஐ நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்“ என்று கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் 5 பேர் கொண்ட குழுவுடன் நிறுவப்பட்ட கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், தற்போது 84 நகரங்களில் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 500 விமானிகளுடன் இந்தியாவில் மிகப்பெரிய ட்ரோன் கட்டமைப்புடன் 200+ உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img