fbpx
Homeபிற செய்திகள்ஆர்டி கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

ஆர்டி கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

ஈரோடு ஆர்டி நேஷனல் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்டி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிகளின் முதல்வர்கள் முனைவர் எஸ்.விமலானந்த், முனைவர் கு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்டி கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ந.பஞ்சநதம் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். தொடர்ந்து, முதல்வர் உறுதிமொழி கூற பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img