‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு’ என்ற பிற்போக்குத் தனமான சிந்தனைகள் வேரூன்றி இருந்த காலத்தில் பெரியார், அண்ணா போன்ற பெண் விடுதலைச் சிந்தனையாளர்களின் குரல்களுக்கு உயிர்ப்பூட்டும் விதமாக செயல்பட்டவர், டாக்டர் கலைஞர் அவர்கள். நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்க சட்டம் இயற்றி அவர் நடைமுறைப்படுத்தினார். ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த காவல்துறையில், முதன்முறையாக பெண் காவலர்களையும், பெண் எஸ்.ஐ.களையும் பணியமர்த்தி அழகு பார்த்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
பெண் கல்வியே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண் குழந்தைகளின் நலன் காக்க இலவச பட் டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழைப் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற எண்ணத்தி லும், குறைந்தபட்ச கல்வி அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், எட்டாம் வகுப்பு வரை பெண்கள் படித்திருந்தால் அவர்களின் திருமணத்தின் போது நிதியுதவி வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
விதவைகளுக்கு மறு வாழ்வு அளிக்கவும், மறுமணத்தை ஊக்குவிக்கவும் மறுமண உதவி திட்டத்தை அறிமுகப்படுத் தினார். மேலும், ’விதவை என்ற பெயரில் கூட பொட்டு இல்லை’ என்று கூறி, கைம்பெண் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார். மேலும், அவர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல் மற் றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆதரவற்ற பெண்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைத்தது போல, மதச் சிறுபான்மையின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களுக்கென தனி விடுதிகளை அமைத்துக் கொடுத்தார். இந்தியாவிலேயே முதல் முறையாகக் சுய உதவிக் குழுத் திட்டம் தொடங்கப்பட்டது, ஏழை எளிய மகளிரின் வாழ் வாதார முன்னேற்றத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. பெண்கள் தொழில் முனைவோராக தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணத் திலும், சிறு வணிகக் கட னையும், சேமிப்பையும் மேற் கொள்ளும் பொருட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து அதிகளவில் தொடங்கப்பட்டன.
பெண் கல்வி முதற்கொண்டு அவர்களுக்கான திருமணம், மறுமணம், குழந்தைப் பேறு, கைம்பெண்களின் வாழ்வா தாரம், சமூக அந்தஸ்து மற் றும் அதிகாரப் பகிர்வு என பெண்கள் நலனுக்காக பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினார்.
டாக்டர் கலைஞர் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்காக இலவச பேருந்து பயணம், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000- உதவித்தொகை பெறும் விதமாக புதுமைப்பெண் என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ் சமுதாயம் வாழ வேண்டும் என்று குரல் தேயப்பேசி, விரல் தேய எழுதி ஒடுக்கப்பட்டோர், பெண்கள் என அனைத்துச் தமிழ் சமுதாயம் உலக அளவில் ஒரு உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்று மகத்தான கனவு கண்டு அவற்றை செயல் படுத்துவதற்காக கொள்கை வழியில் போராடியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
தமிழன் யாருக்கும் தாழா மல், யாரையும் தாழ்த்தா மல் உயர வேண்டும் என்பதற்காக வும், தமிழன் யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் சுயமரி யாதையான ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்தார்.
அந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 1 கோடியே 6 இலட் சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலமும் செயல்படுத்திடாத வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கி டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல மைச்சர் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் 10.11.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மக ளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3,06,919 மகளிர்களுக்கும், இன்று இரண்டாம் கட்டமாக 17,417 மகளிர்களுக்கும் என மொத்தம் 3,24,336 மகளிர்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய் யப்பட்டு, தேர்ந்தெடுக் கப்பட்ட புதிய பயனாளிகளான 17,417 மகளிருக்கு உரிமைத் தொகைக் கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் தங் கம்தென்னரசு ஆகியோர் வழங் கினார்கள்.
பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க் கைத் தரத்தை உயர்த்தி, சுய மரியாதையோடு சமூகத் தில் அவர்கள் வாழ்வ தற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத் தின் நோக்கமாகும்.
ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சாலை, பேருந்து, பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு சகோதரியினுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒரு விளக்கை ஏற்றி வைக்கக்கூடிய மகத்தான திட்டம் தான் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டமாகும்.
வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான்.
குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
ஒவ்வொருவருடைய கைகளில் பணம் இருக்கின்ற போது, அது தரக்கூடிய தன் னம்பிக்கையும், ஆறுதலும் எழுத்திலும் சொல்லிலும் சொல்ல முடியாது. இன்றைய நவீன பொருளாதார அறிஞர்கள் கூட, மக்கள் கையில் அவர்கள் விருப்பத்திற்கும் அத்தியாவசியமான செலவுக்கு பணம் கையில் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் தனி மனிதனுடைய மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தை அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மூல மாக கணக்கிடப்படும் பொழுது உழைப்பை முதலீடாகக் கொண்ட பல்வேறு அங்கத்தினரின் உழைப்பு முறையாக கணக்கிடப்பட வில்லை என்று பொருளாதார அறி ஞர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இருந்து இரவு வரை வீட்டு வேலைகளை செய்யக்கூடிய நம் மகளிர் தன் னுடைய அவர்களின் உழைப்பு முறையாக வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அதில் பெரிய இடைவெளி இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடுகின்றன.
அந்த வகையில் பெண்க ளுடைய உழைப்பை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அவர்க ளுக்கான உரிமை தொகை வழங்கும் இந்த சிறப்புமிகு திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்கள். ஏற்கனவே மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் நாங்கள் பயனடைந்து வருகிறோம். இப்போது எங்களுக்கு அளித்துள்ள இந்த உரிமைத் தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறு சிறு தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உரிமைத் தொகை மூலம் வீட்டு குடும்ப பாரத்தை சுமக்கும் எங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கீகாரம் அளித்து இந்த உரிமை தொகையை வழங்கி உள்ளார்கள்.
இதுபோல இலவச பேருந்து பயணம், மகளிர் சுய உதவி குழு கடனுதவி, படிக்கும் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்களையும் மூலமும் பெண்கள் அடைந்து வருகிறோம். இதுபோன்ற திட்டங்கள் மூலம் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றிகள். தற்போது இந்த கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நாங்கள் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 1000 வங்கி கணக்கில் பெற்று வருகிறோம். வேலைக்கு சென்று மாத ஊதியம் பெறுபவர்களை போன்று குடும்பத் தலைவியான எனக்கும் மாதந்தோறும் கிடைக்கும் இந்த தொகையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உரிமைத்தொகையினை அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொகுப்பு:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்