இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 108 வது நிறுவன தினம் விமரிசையாகக் கொண்டா டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வங்கியின் சேலம் பிராந்திய அலுவல கத்தில் நிறுவன தினம் கேக் வெட்டி கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதில் வங்கியின் சேலம் பிராந்திய தலைவரும் துணைப் பொது மேலாளருமான பி.எம்.செந்தில்குமார் உதவி பொது மேலாளர் நிம்மி பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக காலை 6.30 மணியளவில் வங்கி அலுவலர்கள், பிராந்திய அலுவலகத்திலிருந்து சேலம் ரயில் நிலைய சந்திப்பு வரை சமுதாய நலனுக்கான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாகச் சென்றனர்.
இதையொட்டி மாலையில் சேலம் இரயில்வே அலுவலர் அரங்கத்தில் வங்கியின் நிறுவன தின நிகழ்ச்சியில் சேலம் இரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், மாவட்ட வன அலுவலர் எஸ்வந்த். மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் செந்தில் குமார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. முருகேச பூபதி.
சேலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் வங்கியின் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் வங்கியின் தலைமை அலுவலகம், மும்பையிலிருந்து நேரடியாக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.
வங்கி அலுவலர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



