fbpx
Homeபிற செய்திகள்நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு Flash Mob விழிப்புணர்வு நடனம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு Flash Mob விழிப்புணர்வு நடனம்

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக ஆர் எஸ் புரம் மணிக்கூண்டு முன்பு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் Flash Mob எனப்படும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை துவக்கி வைத்து பார்வையிட்டனர். 

அதனைத் தொடர்ந்து அங்குள்ள பட்டாம்பூச்சி புகைப்பட பாயிண்ட்டில் Flash Mob குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img