fbpx
Homeபிற செய்திகள்என்எல்சி பொதுத் துறை நாள் விழா

என்எல்சி பொதுத் துறை நாள் விழா

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலக நுழைவு வாயிலில் 15-ஆவது ‘பொதுத் துறை நாள்’ விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கொடி மற்றும் என்எல்சி இந்திய நிறுவனத்தின் கொடியை,என் எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஏற்றினார்.

இதையடுத்து, அவர் பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கான வரலாற்றில் பொதுத் துறையின் பங்களிப்பு அதிவேகமாக உயர்ந்துள்ளது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் 5 பொதுத்துறை நிறுவ னங்கள் ரூ.29 கோடி முதலீட்டில் இருந்து தற்போது ரூ.254 லட்சம் கோடி முதலீட்டில் 400-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.

நிலக்கரி, எண்ணெய், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது முன்னிலையில் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத்திட்டங்களின் மூலம் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது என்றார். 2023-2024 நிதியாண்டில் என்எல்சி இந்தியா நிறுவன குழுவினர் ஆற்றிய சிறப்பான செயல் திறனுக்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்வில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், எம். வெங்கடாசலம், உயர் அதிகாரிகள்,ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img