திருச்செங்கோட்டில், மேற்கு மாவட்ட பாஜக தலைவராக இராஜேஷ்குமார் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண் ணாமலை, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிக ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
பாஜக-வை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழகத் தில் பல கட்சிகளுக்கு நிரந்தர பொதுச் செயலாளர்கள், நிரந்தர நிர்வாகிகள் பல ஆண்டுகளாக உள்ளனர். பாஜகவில், ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள. கடந்த 3 மாதமாக, 68,600-க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர் பதவிகளில் இதுவரை 47 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மீதமுள்ள 21,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 1,231 ஒன்றியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதன்பிறகு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். முதற்கட்டமாக, 33 மாவட்ட பாஜக தலைவர்களை அறிவித்துள்ளோம். இன் னும் 34 மாவட்டத் தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
பின்னர் மாநிலத் தலை வர், தேசியத் தலைவர் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கிளை முதல் தேசிய தலைவர் வரை ஜனநாயக முறைப்படி தொண்டர்கள் பங்கேற்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சியை வலுப்படுத்தி, வழி நடத்த வாய்ப்பு கேட்டு போட்டியிடுகிறார்கள். பாஜக வில் தோற்று விட்டார்கள் என்ற வாசகமே கிடையாது. போட்டியிட்டவர்களில் தலை வராக ஒருவர் தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பதாக தான் நாம் அறிவிக்கின்றோம்.
வருகின்ற காலத்தில் உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். தேசிய பொதுக்குழுவில் சென்று கட்சி நிர்வாகிகளின் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கட்சி கொள்கை முடிவை எடுக்கின்ற நேரத்தில், இவர்களின் அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் சிறந்த மாவட் டங்களில் ஒன்றாக பாஜக உறுப்பினர்களை சேர்ப்பதில் திகழ்கிறது.இன்று பாஜகவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது.
இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. பிற கட்சிகள் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறி வருகின்றனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை 2 பாகமாக நடைபெறுகிறது. புதிய தேசியத் தலைவர் வருவதற்கு முன்பும், பின்னும் என 2 கட்டங்களாக நடக் கிறது. பாஜகவில், முதல் உறுப் பினர் சேர்க்கை முகாமில் தமிழகத்தில் 48 இலட்சம் பேர் உறுப்பினர்களை புதிதாக சேர்ந்துள்ளார்கள். நமது இலக்கு 1 கோடி என்பதை நாம் சொன்னபடி செய்து விடுவோம். கட்சி பணிக்காக முழு நேரமும் பணியாற்றும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிர உறுப்பினர்களையும் சேர்த்து வருகிறோம்.
2-வது பாகம் உறுப்பினர் சேர்க்கை பல்வேறு குக்கிராமங்க ளிலும் நடைபெற உள்ளது. 2-வது பாகமும் சேர்த்து மொத்தம் 1 கோடி உறுப்பினர்களை தாண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 2026-ல் ஆட்சி அமைப்பது உறுதி.
ஆறரை கோடி வாக்காளர் கள் கொண்ட தமிழகத்தில், வெளிப்படையாக ஜனநாயக முறைப்படி, தரமான முறையில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம்.
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு குறுகிய காலம் மட்டுமே உள்ள தால், கட்சி பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் மக்களால் நம்மால் தர முடியும்.
தமிழகத்தில் திமுக அரசின், தரமற்ற சாலைகள், டாஸ்மாக், பொறுப்பின்மை, போன்ற பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். குடியும் கும்மாளமும் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் மாவட்ட ஆட் சியர் அவமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியாவில் கல்வித் திறனில் கடைசியாக உள்ள மாநிலமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் உள்ளது. நவீனமான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு திமுக அரசு ஏற்றுக் கொள்வதில்லை. 10 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அரசே ஒத்துக் கொள்கிறது. அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
வருடத்திற்கு 160 ஐஏஎஸ் , ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளை உருவாக்கிய தமிழகம் தற்போது 40-வது தரவரிசையில் பின்தங்கி உள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த நிலையில் சிவில் சர்வீஸ் பணியில், 100-வது இடத்திற்கு சென்று விட்டார்கள். தமிழகத்தில் கல்வித் திறன் குறைய குறைய ஐஐஎம், ஐஐடி, நீட் போன்ற தேர்வுகள் மூலம் அடுத்த கட்ட இந்தியாவோடு போட்டி போடுவதற்கு, மாணவ – மாணவிகளை தயார்படுத்த வில்லை என்பதை தமிழக மக்கள் என்று உணர்கின்றார்களோ அன்று திமுகவிற்கு கடைசி நாளாக இருக்கும்.
இந்தியாவில் முதல் 10 மாசுபட்ட ஆறுகளில் 6 ஆறுகள் தமிழகத்தில்தான் உள்ளன. தாமிரபரணி, நொய்யல், கூவம் உள்ளிட்ட ஆறுகள் நீர் அருந்துவதற்கு தகுதி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களில் விவசாய தொழில் நலிவடைந்து வருகிறது.
கல்வி இன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார பாதிப்பு, ஆணவப் படுகொலை பெண்கள் மீதான வன்கொடுமைகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பலதரப்பிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. மதுபானம் விற்பதில் லாபம் ஈட்டுவது மட்டுமே சாதனையாக உள்ளது.
தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து ஸ்டாலின் பேசியது கிடையாது. வேங்கைவயல் பிரச்னைக்கு தீர்வு இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது குறித்து பேசவில்லை.
சென்னை மாநகர காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில், 8 பேரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது திமுக அரசின் திறமை இன்மை யையே காட்டுகிறது.
திமுக அமைச்சர்கள் பொறுப் பற்று செயல்படுகின்றனர். திமுகவில் சமூக நீதி இல்லை. பட்டியலின அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. திமுக கட்சியிலும் சமூக நீதி கிடையாது. மதத்தை சார்ந்து ஆட்சி நடத்தும் அவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாஜகவில், முதலமைச்சராக ஒடிசா, ஜார்கண்டில் பட்டியல் இனத்தவர் உள்ளனர். துணை முதலமைச்சராக உள்ளனர். மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அனைத்து மதத்தினருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறது பாஜக. அம்பேத்கரின் கொள்கையை படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டிய முதல் கடமை ஒவ்வொரு பாஜக தொண்டர்களுக்கும் உள்ளது.
10 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கி வைத்துள்ளது. இதனை 46 ஆண்டுகாலம் கட்ட வேண்டும். கடன்கார ,குடிகார மாநிலமாக மாற்றிவிட்ட திமுக முதலமைச்சர் வீட்டிற்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2026-ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்/ இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.