fbpx
Homeபிற செய்திகள்முதல் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: மத்திய வேளாண் அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

முதல் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: மத்திய வேளாண் அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை டெல்லியில் வெளியிட்டார்.

கிரிஸ்பர் காஸ் என்ற மரபணு திருத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இவ்விரு ரகங் களின் பயன்கள் குறித்து தொடர்ந்து மத்திய அமைச்சர் கூறியதாவது:
மகசூலில் 19% அதிகரிப்பு, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 20% குறைப்பு. 7,500 மில்லியன் கன மீட்டர் பாசன நீர் சேமிப்பு, வறட்சி, உப்புத்தன்மை மற்றும் காலநிலை மாற்ற அழுத்தங்களுக்கு மேம்பட்ட சகிப்புத்தன்மை, டீஆர்ஆர் ரைஸ் 100 மற்றும் பூசா டிஎஸ்டீ ரைஸ் 1 – பூசா டிஎஸ்டீ ரைஸ் 1 என பெயரிடப்பட்டுள்ள இவ்விரு ரகங்களும் அதிக உற்பத்தி, காலநிலை மாற்றத்தை தாங்கும் திறன் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகிய பண்புகளை கொண்டுள்ளன.

டீஆர்ஆர் ரைஸ் 100 (கலமா):
சம்பா மசூரி (BPT 5204) ரகத்தை அடிப்படையாகக் கொண்ட DRR ரைஸ் 100 (கமலா) ரகமானது ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இதன் நோக்கம் ஒரு கதிர்கொத்தில் தானியங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும், மேலும் இது 20 நாட்களுக்கு முன்பே (130 நாட்களுக்குள்) முதிர்ச்சியடைகிறது.

இதன் குறைந்த வயது (குறுகிய கால அளவு) காரணமாக, நீர் மற்றும் உரங்களை சேமிக்க உதவு கிறது. மீத்தேன் வாயு வெளியேற்றத்தையும் இது குறைக்கிறது. சாயாத தன்மை கொண்டது . அரிசியின் தரம் அசல் சம்பா மசூரி இரகத்தைப் போன்றே இருக்கும் .

பூசா டிஎஸ்டீ ரைஸ் 1 :
பூசா டிஎஸ்டீ ரைஸ் 1 ரகமானது, எம்.டி.யு 1010 என்ற ஆந்திர நெல் ரகத்தினை அடிப்படையாகக் கொண்டு டெல்லியில் உள்ள இந்தியா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த ரகத்தை பயிரிடுவதன் மூலம் உப்பு மற்றும் காரத்தன்மை மிகுந்த மண்ணில் விளைச்சலை 9.66% முதல் 30.4% வரை அதிகரிக்க முடியும். தவிர, உற்பத்தியில் 20% வரை அதிகரிக்கும் திறன் பெற்றது.

இவ்விரு ரகங்களையும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, சத்தீ ஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத் தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் பயிரிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் வெற்றியினை தொடர்ந்து , எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உட்பட பல பயிர்களில் மரபணு திருத்த ஆராய்ச்சிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் துவக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img