கோவை சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக, மார்ட்டின் குழுமத்தின் இயக்குநரும், மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், ரூ.8,41,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்த நிதியுதவிக்கான நிகழ்வு, கோவையில் உள்ள மார்ட்டின் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் வசதிகளை உருவாக்கும்
நோக்கிலான இந்த முயற்சி, பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கல்விசார் மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.



