fbpx
Homeபிற செய்திகள்சிறுவணிகர்களிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் பறக்கும் படையை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்

சிறுவணிகர்களிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் பறக்கும் படையை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்

சாமானிய வணிகர்களிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரம் செய்யும் பணத்தை பறிமுதல் செய்து வருவது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, அதனை கண்டித்து வருகிற 31ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட் டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூரில் வருகிற மே மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ள 43-வது மாநில மாநாட்டில் கோவை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வைப்பது மற்றும் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆன்லைனில் வணிகம் செய்வதை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்த விக்ரமராஜா, திருவாரூர் மாநாட்டிற்கு லட்சக் கணக்கானோரை திரட்டக் கூடிய பணிகளை செய்து கொண்டிருப் பதாகவும், இந்த மாநாடு வரலாறு திரும்பி பார்க்க கூடிய மாநாடு என்றும் குறிப்பிட்டார்.

சாமானிய வணிகர்களை பாதுகாக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும் எனவும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதுடன்,இன்று காலை ஆடு அறுத்த கூலியை பெற்று சென்ற சாமானிய வணிகரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் சூழ்ந்து மறியல் செய்து திருப்பி வாங்கியி ருக்கிறார்கள் எனவும் பறக்கும் படை அதிகாரிகள் காய்கறி பழக் கடைகள் முன்பு நின்று கொண்டு வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

மதுபான கடைகள் முன்பு நின்று கொண்டு மது கொடுத்து வருகிறாயா என காவல்துறை கேட்பது போல பறக்கும் படை யினர் வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருவ தாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதே நிலை தொடர்ந்தால் கடைய டைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள் ளதாகவும் தெரிவித்தார். மேலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும் என்றும் சிறிய அளவில் உணவகங்கள் நடத் தும் வணிகர்களை கண்டறிந்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட் டுக்கொண்ட அவர்,தங்களது கோரிக்களை நிறைவேற்றும் அரசி யல் கட்சியினருக்கே எங்களது ஆதரவு என்றும் குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img