தென் மாவட்டங் களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரலாறு காணாத கன மழை பெய்தது.
இதன் காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாலு மாவட்டங்களும் தனி தெளிவாக மாறி தத்தளித்து வருகிறது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனை அடுத்து தமிழக அரசின் சார்பில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கும் குழுக் களாக அனுப்பி பேரிடர் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு தூய்மை பணிகளை மேற் கொள்வதற்காக இன்று ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மை பணியாளர்கள், 8 மேற் பார்வையாளர்கள், இரண்டு சுகாதார ஆய் வாளர்கள் என மொத்தம் 110 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் இரண்டு பஸ்களில் தென் மாவட்டங்களுக்கு கிளம்பி சென்றனர்.
மேலும் இரண்டு லாரிகளில் தூய்மை பணிக்கு தேவை யான உபகரணங் களும் எடுத்துச் செல்லப்பட்டன. இவர்கள் நான்கு மாவட் டங்களிலும் குழுக் களாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகளை மேற் கொள்வார்கள் என அதி காரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 2 சுகா தார ஆய்வாளர்கள் தலை மையில் 100 தூய்மை பணியாளர்கள், 8 மேற் பார்வையாளர்கள் ஆகி யோர் தூத்துக்குடி மாவட் டத்தில் மழை வெள்ள பாதிப்பு பணிகளை சீரமைக்க நேற்று அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை வகித்து, சுகா தார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் 110 பேரையும் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். தூய்மை பணியாளர்கள் அங்கு பணி செய்ய உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள் அடங்கிய ஒரு வாகனமும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாந கராட்சி துணை மேயர் செல்வராஜ், நகர் நல அலு வலர் டாக்டர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



